
கொல்கத்தாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 54-ஆவது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தாவும், புணே சிட்டி அணியும் மோதுகின்றன.
கொல்கத்தா அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. அதநேரத்தில் புணே சிட்டி அணி ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. இதனால் இந்த ஆட்டம் சம்பிரதாய ஆட்டமாகவே பார்க்கப்பட்டாலும், கொல்கத்தா அணி இந்த ஆட்டத்தில் வெல்லும்பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.
இதுதவிர இந்த சீசனில் கொல்கத்தா அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் கடைசிப் போட்டி இது. எனவே உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்தப் போட்டியை வெற்றியோடு முடிக்க கொல்கத்தா அணி தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐஎஸ்எல் போட்டியின் 3 சீசன்களிலும் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் ஒரே அணி கொல்கத்தா என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் புணே அணியும், இந்த சீசனின் கடைசி ஆட்டத்தை வெற்றியோடு முடிக்கப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஹபாஸ், இப்போது புணே பயிற்சியாளராக உள்ளார். எனவே இந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்துவதற்கு தேவையான ஆலோசனைகளை புணே அணிக்கு ஹபாஸ் அளிப்பார் என நம்பலாம்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.