
51-ஆவது அகில இந்திய பாம்பே தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பஞ்சாப் தேசிய வங்கி அணி காலிறுதிக்கு முன்னேறியது.
மும்பையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் தேசிய வங்கி அணி 4-3 என்ற கோல் கணக்கில் சிஏஜி (தலைமைக் கணக்கு தணிக்கை அலுவலகம்) அணியைத் தோற்கடித்தது.
இதன்மூலம் 2-ஆவது வெற்றியைப் பெற்ற பஞ்சாப் தேசிய வங்கி அணி 6 புள்ளிகளுடன் "சி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்ததோடு காலிறுதியையும் உறுதி செய்தது.
சிஏஜி அணி, பஞ்சாபிடம் தோற்றபோதும் கோல் வித்தியாச அடிப்படையில் "சி' பிரிவில் இருந்து 2-ஆவது அணியாக காலிறுதிக்கு முன்னேறியது.
"டி' பிரிவு ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 5-3 என்ற கோல் கணக்கில் மேற்கு ரயில்வே அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் கடற்படை அணி காலிறுதியை உறுதி செய்தது.
இந்தப் பிரிவில் 2-ஆவது இடம்பிடித்ததன் மூலம் மேற்கு ரயில்வே அணியும் காலிறுதிக்கு முன்னேறியது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.