
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டப் போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில், முதல் கோல் வாய்ப்பு கேரள அணிக்கு கிடைத்தது.
ஆட்டத்தின் 8-ஆவது நிமிடத்தில் சக வீரர் செட்ரிக் பாஸ் செய்த பந்தை தலையால் முட்டி கோலாக்கினார் கேரள வீரர் வினீத். அதற்கு பதிலடி தரும் வகையில் 18-ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் பியர்சன் கோல் அடித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் அடிக்காத காரணத்தால், ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.