
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பை அவர் இழக்கலாம் எனத் தெரிகிறது.
இதுகுறித்து, பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஹர்திக் பாண்டியாவுக்கு வலது தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. அவரது தோள்பட்டையில் நூலிழை அளவில் விரிசல் விழுந்துள்ளதாக பிசிசிஐ மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
இந்தக் காயத்தில் இருந்து அவர் மீண்டு வர 6 வார காலம் ஆகும். அவர் காயத்திலிருந்து மீண்டு வரும் வரையில் பிசிசிஐ மருத்துவக் குழு அவரை தொடர்ந்து கண்காணிக்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா ஆகியோர் ஏற்கெனவே காயம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.