
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன் 35 பந்துகளில் 75 ரன்கள் குவித்து மிரட்டினார். அதிரடியாக ஆடிவந்த நரைனின் விக்கெட்டை ஆண்ட்ரூ டை வீழ்த்தி, திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் அணியுடன் கொல்கத்தா அணி ஆடிவருகிறது. இந்தூரில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக சுனில் நரைனும் கிறிஸ் லின்னும் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த நிலையில், கிறிஸ் லின் அவுட்டானார். அதன்பிறகு நரைனுடன் உத்தப்பா ஜோடி சேர்ந்தார். பஞ்சாப் அணியின் பவுலிங்கை பறக்கவிட்டார் நரைன். சுனில் நரைனின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் பஞ்சாப் அணி திணறியது. அஸ்வினும் பவுலர்களை மாற்றி மாற்றி இறக்க, எதுவும் எடுபடவில்லை.
ஆட்டம் கைமீறி போக, 12வது ஓவரில் நரைனையும் உத்தப்பாவையும் அவுட்டாக்கி பிரேக் கொடுத்தார் ஆண்ட்ரூ டை. 35 பந்துகளில் 75 ரன்கள் எடுத்த நிலையில் டையின் பவுலிங்கில் வீழ்ந்தார்.
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், தினேஷ் கார்த்திக் ரசல் ஜோடியும் அதிரடியாக ஆடிவருகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.