ஹைதராபாத்தின் வெற்றிக்கு இதுதான் காரணம்!! அந்த அணி வீரரே சொல்லும் ரகசியம்

Asianet News Tamil  
Published : May 12, 2018, 04:40 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
ஹைதராபாத்தின் வெற்றிக்கு இதுதான் காரணம்!! அந்த அணி வீரரே சொல்லும் ரகசியம்

சுருக்கம்

yusuf pathan speaks about kane williamson captaincy

ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனின் கேப்டன்சி திறமைதான் அந்த அணியின் வெற்றிக்கு காரணம் என யூசுப் பதான் தெரிவித்துள்ளார்.

இந்த ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே ஹைதராபாத் அணி ஆதிக்கம் செலுத்திவருகிறது. சிறந்த பவுலிங் அணியாக அறியப்பட்ட ஹைதராபாத் அணி, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிறந்த பேட்டிங்கையும் வெளிப்படுத்தியதால் எதிரணிகள் கலக்கத்தில் உள்ளன. 18 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்குள் ஹைதராபாத் அணி நுழைந்துவிட்டது.

அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், வீரராகவும் கேப்டனாகவும் சிறந்து விளங்குகிறார். பவுலர்களை பயன்படுத்துவது, இக்கட்டான சூழலையும் பொறுமையுடன் கையாள்வது என சிறப்பாக கேப்டன்சி செய்கிறார். 

தொடர்ந்து வெற்றிகளை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு ஹைதராபாத் அணி தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத் அணி தொடர்பாகவும், கேன் வில்லியம்சனின் கேப்டன்சி தொடர்பாகவும் அந்த அணியின் வீரர் யூசுப் பதான் கருத்து தெரிவித்துள்ளார். வில்லியம்சன் பொறுமையான நிதானமான கேப்டன்; அவரது அந்த இயல்பு வீரர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அணியில் அவரது இருப்பு, இக்கட்டான நிலைகளிலும் ஆட்டம் எங்களது கட்டுப்பாட்டிற்குள் இருக்க உதவுகிறது. எந்த நேரத்தில் யாருக்கு எந்த பவுலரை வீசவைக்க வேண்டும் என்ற வில்லியம்சனின் உத்தி சிறப்பாக உள்ளது. பவுலர்களை பயன்படுத்துவதில் வில்லியம்சன் சிறந்து விளங்குகிறார். அது அணியின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது என யூசுப் பதான் தெரிவித்துள்ளார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?