
இரட்டை சதம் அடிப்பது எப்படி என ரோஹித்திடம் கோலி அறிவுரை கேட்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் கோலிக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த 11ம் தேதி இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். கிரிக்கெட் வீரர்களில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருக்கு மட்டுமே கோலி அழைப்பு விடுத்திருந்தார்.
வரும் 21 மற்றும் 26 ஆகிய தேதிகளில் டெல்லி மற்றும் மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கிடையே கோலியின் திருமணத்திற்கு, இந்திய அணியின் பொறுப்பு கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், கோலிக்கு வாழ்த்து தெரிவித்த ரோஹித், கணவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற தகவல்கள் அடங்கிய ஹேண்ட்புக் ஒன்றை உனக்கு வழங்குகிறேன் என பதிவிட்டிருந்தார்.
ரோஹித்தின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த கோலி, அப்படியே இரட்டை சதம் அடிக்கும் டிப்ஸ் அடங்கிய ஹேண்ட்புக்கையும் வழங்குமாறு பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா, இலங்கைக்கு எதிராக 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய ரோஹித், அண்மையில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் 208 ரன்கள் குவித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்களை விளாசிய ஓரே வீரர் ரோஹித் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.