ஒரு போட்டியிலும் இங்கிலாந்தை ஜெயிக்கவிடாமல் ஆஷஸ் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா...

 
Published : Dec 19, 2017, 10:14 AM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
ஒரு போட்டியிலும் இங்கிலாந்தை ஜெயிக்கவிடாமல் ஆஷஸ் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா...

சுருக்கம்

Australia won the Ashes Test series without winning one match in Australia ...

இங்கிலாந்திற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் 3-வது போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றிப் பெற்றதையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலியா.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வியாழக்கிழமை தொடங்கியது. இதன் 3-வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணியில் டேவிட் மலான் அதிகபட்சமாக 140 ஓட்டங்களும், அடுத்தபடியாக ஜானி பேர்ஸ்டோவ் 119 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஸ்டோன்மேன் அரைசதம் கடக்க, எஞ்சிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இவ்வாறாக இங்கிலாந்து 115.1 ஓவர்களில் 403 ஓட்டங்களுக்கு முதல் இன்னிங்ûஸ முடித்துக் கொண்டது.

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஹேஸில்வுட் 3 விக்கெட்கள், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்கள், நாதன் லயன் ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா அசத்தலாக ஆடி 179.3 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 662 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 239 ஓட்டங்கள் விளாசினார். அடுத்தபடியாக மிட்செல் மார்ஷ் 181 ஓட்டங்கள் அடித்தார். உஸ்மான் கவாஜா அரை சதம் எட்டினார்.

இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆன்டர்சன் 4 விக்கெட்கள், ஓவர்டன் 2 விக்கெட்கள், வோக்ஸ் மற்றும் மொயீன் அலி தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸில் 259 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து ஞாயிற்றுக்கிழமை முடிவில் 38.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், கடைசி நாள் ஆட்டத்தை டேவிட் மலான் 28 ஓட்டங்கள், ஜானி பேர்ஸ்டோவ் 14 ஓட்டங்களுடன் தொடங்கினர்.

இந்த ஆட்டம் மழையால் சற்று தாமதமானது. பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் பேர்ஸ்டோவ் அதே ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த மொயீன் அலி 11 ஓட்டங்களில் நடையைக் கட்டினார்.

மறுமுனையில் தகுந்த பார்ட்னர்ஷிப் கிடைக்காத டேவிட் மலான் அரைசதம் கடந்து 54 ஓட்டங்களில் வீழ்ந்தார். ஓவர்டன் 12 ஓட்டங்களில் பெவிலியன் திரும்ப, ஸ்டூவர்ட் பிராட் டக் ஔட் ஆனார். இவ்வாறாக, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட 41 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் ஆட்டமிழந்தது இங்கிலாந்து.

ஆஸ்திரேலிய தரப்பில் ஹேஸில்வுட் அதிகபட்சமாக 5 விக்கெட்கள், பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 2 விக்கெட்கள், மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட் எடுத்தனர்.

239 ஓட்டங்கள் விளாசிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றிப் பெற்றதையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலியா.

கடந்த சீசனில் இங்கிலாந்து வெற்றிப் பெற்றது என்பது குறிப்பிடத்தகக்து.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!