ஜூனியர் சர்வதேச குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 11 பதக்கங்கள்; சிறந்த அணி விருதும் இந்தியாவுக்கே...

 
Published : Dec 19, 2017, 10:12 AM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
ஜூனியர் சர்வதேச குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 11 பதக்கங்கள்; சிறந்த அணி விருதும் இந்தியாவுக்கே...

சுருக்கம்

Junior International Boxing 11 Medals for India Best Team Award for India

ஜூனியர் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய ஆடவர்கள் 6 தங்கங்கள், 4 வெள்ளிகள், ஒரு வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்கள் வென்று போட்டியின் "சிறந்த அணி' விருதை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தனர்.

ஜூனியர் சர்வதேச குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் பாவேஷ் கட்டாமனி 52 கிலோ எடைப் பிரிவில் ஜெர்மனியின் லாùஸக் சாடெக்கை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். அத்துடன், இந்தப் போட்டியின் "சிறந்த வீரர்' என்ற விருதையும் அவரே தட்டித் சென்றார்.

அதேபோன்று, 60 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட அக்ஷய் 3-2 என்ற கணக்கில் நூலிழையில் டென்மார்க்கின் நிகோலாய் டெர்டெரியானை வீழ்த்தி முதலிடம் பிடித்தார்.

மற்றொரு வீரரான விஜய்தீப் 63 கிலோ எடைப் பிரிவில் நெதர்லாந்தின் பிரயன் வோஸனை வீழ்த்தி தங்கத்தை வென்றார்.

மற்றொரு பிரிவில் ஜெர்மனியின் ஜான் கெர்ஹாசரை வென்று, இந்தியாவுக்கு 4-வது தங்கம் வென்று தந்தார் ஐஷ் பனு.

இதேபோல 75 கிலோ பிரிவில் போட்டியிட்ட வினித், பிரான்ஸின் ரஃபேல் மோனியை வென்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

மற்றொரு ஆட்டமான 80 கிலோ பிரிவில் களம் கண்ட லக்ஷய் சாஹர், ஜெர்மனியின் ராஸி அல்-ஜெயினையும் வென்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

இந்த நிலையில், 48 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் ஃபிராங்க்ளின் வோமோவிடம் வீழ்ந்து வெள்ளி வென்றார் இந்திய வீரர் அனில்.

அதேபோல 50 கிலோ பிரிவில் போட்டியிட்ட ஸ்வப்னில் 2-3 என்ற கணக்கில் இங்கிலாந்தின் ரீஸ் தீஹானிடம் தோல்வி கண்டார்.

 54 கிலோ எடைப் பிரிவில களம் கண்ட அமன், 0-5 என்ற கணக்கில் பிரான்ஸின் பெனிக் மெல்குமியானிடமும், 80 கிலோவுக்கு அதிகமான எடைப் பிரிவில் சதேந்தர், இங்கிலாந்தின் வில்லியம் ஹோவிடமும் வீழ்ந்து வெள்ளியுடன் திரும்பினர்.

மற்றொரு பிரிவான 66 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஆகாஷ், ஸ்லோவேனியாவின் காஷி சாதிக்கிடம் வீழ்ந்து வெண்கலம் வென்றார்.

இப்படி, ஜூனியர் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய ஆடவர்கள் 6 தங்கங்கள், 4 வெள்ளிகள், ஒரு வெண்கலம் வென்று  இப்போட்டியின் "சிறந்த அணி' விருதை இந்திய அணிக்கு பெற்றுத் தந்தனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!