சிக்னல் கொடுத்த ரிஷப் பண்ட்டை கையும் களவுமாக பிடித்த கோலி!! உள்ளத்தை கொள்ளையடிக்கும் வீடியோ

Asianet News Tamil
Published : May 14, 2018, 04:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
சிக்னல் கொடுத்த ரிஷப் பண்ட்டை கையும் களவுமாக பிடித்த கோலி!! உள்ளத்தை கொள்ளையடிக்கும் வீடியோ

சுருக்கம்

kohli rishabh pant banter conversation during match

டெல்லி - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இடையே சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பலரது உள்ளங்களை கொள்ளையடித்துள்ளது.

டெல்லி - பெங்களூரு அணிகளுக்கு இடையே 45வது லீக் போட்டி கடந்த 12ம் தேதி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, ரிஷப் பண்ட்டின் அரைசதம், அபிஷேக் சர்மாவின் கடைசி நேர அதிரடியால் 181 ரன்களை குவித்தது.

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸின் அதிரடி அரைசதத்தால் 19 ஓவரிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், பெங்களூரு அணியின் பேட்டிங்கின் போது, நேபாள வீரர் சந்தீப் வீசிய 7வது ஓவரை கோலி எதிர்கொண்டார். முதல் பந்தில் கோலி பவுண்டரி அடித்தார். இரண்டாவது பந்தை சந்தீப் வீசும்போது, ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசுமாறு விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கையால் சைகை செய்தார். ஃபீல்டிங் பொசிசன்களை கண்காணித்த கோலி, ரிஷப் பண்ட் சைகை காட்டியதை பார்த்துவிட்டார். உடனே ரிஷப் பண்ட்டிடம் என்ன செய்தாய்? என கேட்க, அவர் க்ளௌசை காட்டி ஒன்றுமில்லை என்று கூறினார். இருவரும் சிரித்து கொண்டனர். பின்னர் அவரவர் வேலையை பார்க்க தொடங்கிவிட்டனர்.

The two local boys having a fun chat out there.

What do you reckon the conversation is all about?#DDvRCB @imVkohli @RishabPant777 #VIVOIPL pic.twitter.com/i2X1Y3wvza
— IndianPremierLeague (@IPL) 12 May 2018

சிக்னல் கொடுத்த ரிஷப் பண்ட்டை கோலி கையும் களவுமாக பிடித்து, இருவரும் வேடிக்கையாக பேசிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

5வது T20 போட்டியிலும் இந்தியா அசத்தல் வெற்றி.. இலங்கையை ஒயிட்வாஷ் செய்து சிங்கப்பெண்கள் மாஸ்!
WPL 2026: ஆர்சிபி ரசிகர்கள் ஷாக்.. ஸ்டார் வீராங்கனை திடீர் விலகல்.. டெல்லியிலும் முக்கிய மாற்றம்!