ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியின்போது சென்னை அணி ஃபீல்டிங்கின்போது, ஜடேஜாவை தோனி பயமுறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. அப்போது, ஹர்பஜன் வீசிய 7வது ஓவரில் லெக் சைடில் தட்டிவிட்டு இரண்டு ரன்கள் ஓடுவதற்காக வேகமாக தவான் ஓடினார். இரண்டு ரன்களை தடுக்கும் வகையில், அந்த பந்தை கீப்பர் தோனி, வேகமாக விரட்டிச்சென்று பிடிப்பார். அப்போது, அந்த பந்தை பிடிக்க ஜடேஜாவும் ஓடிவருவார். பந்தை விரட்டி சென்று பிடித்த தோனி, ஜடேஜா மீது எறிவது போல கையை வேண்டுமென்றே ஓங்க, ஜடேஜா ஒரு நொடி பயத்தில் நடுங்கிவிடுவார். நகைச்சுவையாக தோனி செய்த இந்த செயலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Yesterday #CSKvSRH Match funny movement of Thala dhoni and Jaddu#WhistlePodu #Dhoni #Jadeja #IPL2018 pic.twitter.com/JmIleMzIDa
— Sekar (@Sekar_Anbalagan) May 14, 2018

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.