நீங்க 2 பேரும் கவலைப்படாதீங்க தம்பிங்களா!! கேப்டன் கோலியின் வாக்குறுதியால் குதூகலிக்கும் இளம் வீரர்கள்

Published : Feb 25, 2019, 12:47 PM IST
நீங்க 2 பேரும் கவலைப்படாதீங்க தம்பிங்களா!! கேப்டன் கோலியின் வாக்குறுதியால் குதூகலிக்கும் இளம் வீரர்கள்

சுருக்கம்

ஆஸ்திரேலிய தொடரில் ராகுல், ரிஷப் பண்ட், விஜய் சங்கர் ஆகியோர் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். முதல் டி20 போட்டியில் விஜய் சங்கருக்கு ஆட வாய்ப்பளிக்கப்படவில்லை. ராகுலும் ரிஷப் பண்ட்டும் அணியில் இருந்தனர்.   

இந்திய அணிக்கு உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் ஆஸ்திரேலிய தொடர். அதனால் உலக கோப்பைக்கான அணியில் பரிசீலிக்கப்படும் சில வீரர்களை பரிசோதித்து உலக கோப்பை அணியில் இணைப்பது குறித்த முடிவெடுக்க இதுதான் கடைசி வாய்ப்பு.

அந்த வகையில், ஆஸ்திரேலிய தொடரில் ராகுல், ரிஷப் பண்ட், விஜய் சங்கர் ஆகியோர் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். முதல் டி20 போட்டியில் விஜய் சங்கருக்கு ஆட வாய்ப்பளிக்கப்படவில்லை. ராகுலும் ரிஷப் பண்ட்டும் அணியில் இருந்தனர். 

தவானுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டிருந்த ராகுல், அரைசதம் அடித்து சஸ்பெண்டுக்கு பிறகு செம கம்பேக் கொடுத்தார். சில அபாரமான ஷாட்டுகளை ஆடி கவனத்தை ஈர்த்தார் ராகுல். ரிஷப் பண்ட் துரதிர்ஷ்டவசமாக 3 ரன்களில் ரன் அவுட்டானார். ஆனாலும் ராகுலும் ரிஷப் பண்ட்டும் உலக கோப்பை அணியில் எடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியான விஷயம் என்பதால், அவர்கள் இருவருக்கும் உலக கோப்பைக்கு முன் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும் என கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் கோலி, இந்த போட்டியில் ராகுல் சிறப்பாக ஆடினார். எங்களது பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக அமைந்தது. உலக கோப்பையை மனதில்வைத்து ராகுலுக்கும் ரிஷப் பண்ட்டுக்கும் போதுமான வாய்ப்பும் நேரமும் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

Harbhajan Singh House: 7 கோடி ரூபாய் பங்களா! பிரம்மாண்ட தியேட்டர், கிரிக்கெட் ரூம்...ஹர்பஜன் சிங்கின் சொகுசு அரண்மனை இதோ!
ரூ.100 கொடுத்தால் தான் செல்ஃபி.. சிறுவர்களிடம் கண்டிஷன் போட்ட வைபவ் சூர்யவன்ஷி: கடைசியில் ட்விஸ்ட்!