
தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெஸிசின் கேட்சை இந்திய கேப்டன் விராட் கோலி தவறவிட்டார்.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டி, 6 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில், இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளெஸிஸ், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக எல்கர் மற்றும் மார்க்ராம் களமிறங்கினர். முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே எல்கரை வீழ்த்திய புவனேஷ்வர் குமார், அதற்கடுத்து 5 ரன்களில் மார்க்ரமையும் 3 ரன்களில் ஹாசிம் ஆம்லாவையும் வெளியேற்றினார். 13 ரன்களுக்கே முதல் மூன்று விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்க அணி இழந்தது.
எனினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த டிவில்லியர்ஸ் மற்றும் டு பிளெஸிஸ் ஜோடி நிதானமாக ஆடிவருகிறது. முதல் மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்திய இந்திய அணி, டிவில்லியர்ஸ்-டுபிளெஸிஸ் ஜோடியை பிரிக்க முடியாமல் தவித்து வருகிறது.
டுபிளெஸிஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பு ஒன்றை சற்று சுதாரித்திருந்தால் கோலி பிடித்திருக்கலாம். முகமது ஷமி வீசிய 17வது ஓவரின் மூன்றாவது பந்தை டுபிளெஸிஸ் எதிர்கொண்டார். அவுட்சைட் எட்ஜ் ஆகி, இரண்டாவது ஸ்லிப்பில் நின்ற கோலியை நோக்கி பந்து சென்றது. அதை கோலி கேட்ச் பிடித்தார். ஆனால் கேட்ச் முறையாக பிடிக்கப்பட்டதா என்பது கோலிக்கே தெரியவில்லை. இதையடுத்து மூன்றாவது அம்பயரிடம் முடிவு விடப்பட்டது.
ரீவைண்ட் செய்து பார்த்ததில், கோலியின் கைக்கு முன்னே பந்து தரையில் தட்டியது. கோலி சற்று கவனமாக இருந்திருந்தால் பந்தை பிடித்திருந்திருக்கலாம். கையை சற்று முன் சென்று பிடித்திருந்தால் டுபிளெஸிஸ் அவுட் ஆகியிருப்பார்.
டு பிளெஸிஸ்-க்கு கொடுக்கப்பட்ட இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி ஆடிவருகிறார். டிவில்லியர்ஸ் அரைசதம் கடந்து ஆடிவருகிறார். 25 ஓவர்களின் முடிவில், அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.