
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஷ்வர் குமார் அசத்தினார்.
இந்தியாவில் நடைபெற்ற அனைத்து தொடர்களையும் வென்று கோலி தலைமையிலான இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளெஸிஸ், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
எனினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த டிவில்லியர்ஸ் மற்றும் டு பிளெஸிஸ் ஜோடி நிதானமாக ஆடிவருகிறது. 15 ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. டிவில்லியர்ஸும் டுபிளெஸிசும் களத்தில் உள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.