ஜடேஜாவை பழிதீர்த்த விராட் கோலி!! என்ன ஒரு வில்லத்தனம்..?

By karthikeyan VFirst Published Nov 1, 2018, 3:01 PM IST
Highlights

இந்திய அணியில் மிகவும் ஃபிட்டான வீரர்கள் கோலி, ஜடேஜா. இருவருமே மிகச்சிறந்த ஃபீல்டர்கள். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங்கில் விராட் கோலியை ஓவர்டேக் செய்து பந்தை பிடித்தார் ஜடேஜா. 
 

இந்திய அணியில் மிகவும் ஃபிட்டான வீரர்கள் கோலி, ஜடேஜா. இருவருமே மிகச்சிறந்த ஃபீல்டர்கள். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங்கில் விராட் கோலியை ஓவர்டேக் செய்து பந்தை பிடித்தார் ஜடேஜா. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் 377 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இன்னிங்ஸின்போது, முதல் ஓவரின் ஐந்தாவது பந்தை ஹேம்ராஜ் ஆஃப் திசையில் அடிக்க அதை பிடிக்க கோலியும் ஜடேஜாவும் ஓடினர். இருவரும் ஒரே நேரத்தில் ஓட ஆரம்பித்து பந்தை பிடிக்க வேகமாக ஓடினர். இருவரும் போட்டி போட்டு ஓடினர். ஆனால் ஜடேஜா பந்தை நெருங்கிவிட்டதால் அவர் பிடிப்பதற்கு ஏதுவாக கோலி வேகத்தை குறைத்தார். ஜடேஜா பந்தை பிடித்து கோலியிடம் வீசினார். 

pic.twitter.com/xwSJjDG3Ej

— Mushfiqur Fan (@NaaginDance)

அன்று ஜடேஜா கோலியை முந்திச்சென்று பந்தை பிடித்த நிலையில், இன்று திருவனந்தபுரத்தில் நடந்துவரும் கடைசி ஒருநாள் போட்டியில் அதேமாதிரி ஒரு சந்தர்ப்பம் உருவானது. புவனேஷ்வர் குமார் வீசிய 5வது ஓவரின் 5வது பந்தை சாமுவேல்ஸ் அடிக்க, அதேபோல இருவரும் பந்தை விரட்டி ஓடினர். ஆனால் இந்தமுறை ஜடேஜாவை முந்திச்சென்று கோலி பந்தை பிடித்தார். 

click me!