ஆரம்பத்துலயே அதகளப்படுத்திய புவனேஷ் - பும்ரா!! கதிகலங்கிய வெஸ்ட் இண்டீஸ்

By karthikeyan VFirst Published Nov 1, 2018, 2:03 PM IST
Highlights

கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 
 

கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் நடந்துவருகிறது. 

முதல் நான்கு போட்டிகளிலும் டாஸ் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், இந்த போட்டியில் முதன்முறையாக டாஸ் வென்று, பேட்டிங் தேர்வு செய்தார். 

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வென்று தொடரை சமன்செய்யும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்கியுள்ளன. எனினும் அதற்கேற்றாற்போல் அந்த அணி தொடக்கத்தை அமைத்துக்கொள்ளவில்லை. 

தொடக்க வீரர்களாக கீரன் பவல் மற்றும் ரோமன் பவல் ஆகிய இருவரும் களமிறங்கினர். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே கீரன் பவல், விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ஷாய் ஹோப் இம்முறை ஏமாற்றமளித்தார். பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் கிளீன் போல்டாகி டக் அவுட்டாகி வெளியேறினார். 

இதையடுத்து அந்த அணி முதல் இரண்டு ஓவர்களில் 2 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதைத்தொடர்ந்து ரோமன் பவலுடன் அனுபவ வீரர் சாமுவேல்ஸ் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராவின் பவுலிங்கில் ரன் எடுக்க முடியாமல் திணறும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 6 ஓவருக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆடிவருகிறது. 
 

click me!