கங்குலி, தோனியை எல்லாம் தூக்கி அடித்து டாப் கியரில் பறக்கும் கோலி!!

First Published Aug 3, 2018, 10:08 AM IST
Highlights
kohli has a chance to reach new milestone as a captain


ஒரு கேப்டனாக கங்குலி, தோனியை எல்லாம் மிஞ்சி அதிவேகமாக சென்று கொண்டிருக்கிறார் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

இந்தியா இங்கிலாந்து இடையேயான டி20 தொடரை இந்திய அணியும் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் வென்றன. இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. 

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்கள் எடுத்தது. இந்திய அணி விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்களை சேர்த்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. 13 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 9 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின்படி, இந்திய அணியை விட 22 ரன்கள் முன்னிலையில் உள்ளது இங்கிலாந்து அணி. 

இந்த போட்டி இங்கிலாந்து அணியின் ஆயிரமாவது சர்வதேச டெஸ்ட் போட்டி. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தினால், கேப்டனாக விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டுவார். 

இந்திய அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக தோனி தலைமையிலான இந்திய அணி 27 டெஸ்ட் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. கங்குலி தலைமையிலான இந்திய அணி 21 டெஸ்ட் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. தற்போதைய கேப்டன் விராட் கோலி கேப்டன்சியில் ஏற்கனவே இந்திய அணி 21 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றால், அதிக டெஸ்ட் வெற்றிகளை குவித்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் கங்குலியை முந்தி இரண்டாவது இடத்தை பிடிப்பார் கோலி.

தோனி கேப்டன்சியில் 60 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 27 வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ளது. அதேபோல் கங்குலி கேப்டன்சியில் 49 போட்டிகளில் ஆடி 21 வெற்றிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கோலி தலைமையில் வெறும் 35 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 21 வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ளது. மேலும் கோலி தலைமையில் ஆடப்பட்ட 12 டெஸ்ட் தொடர்களில் 2 தொடரை மட்டுமே இந்திய அணி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில், தோனி, கங்குலியை விட வெற்றிகரமான கேப்டனாக கோலி வலம்வந்துகொண்டிருக்கிறார். 
 

click me!