பேட்டிங்கில் கோலி ஃபர்ஸ்ட்; பௌலிங்கில் ஜஸ்ப்ரீத் பூம்ரா ஃப்ர்ஸ்ட்…

Asianet News Tamil  
Published : Nov 09, 2017, 10:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
பேட்டிங்கில் கோலி ஃபர்ஸ்ட்; பௌலிங்கில் ஜஸ்ப்ரீத் பூம்ரா ஃப்ர்ஸ்ட்…

சுருக்கம்

kohli got first place in bating

 

சர்வதேச கிரிக்கெட் குழு தரவரிசையில் பேட்டிங்கில் கோலியும், பௌலிங்கில் ஜஸ்ப்ரீத் பூம்ராவும் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் குழு (ஐசிசி) நேற்று வெளியிட்ட டி-20 பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

நியூஸிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில், கோலி மொத்தம் 104 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் 13 புள்ளிகள் அதிகம் பெற்ற அவர், டி-20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையிலும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபின்ச் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மூன்று இடங்கள் முன்னேறி 21-வது இடத்தையும், ஷிகர் தவன் 20 இடங்கள் முன்னேறி 45-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தரவரிசையில், நியூஸிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் காலின் மன்ரோ 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அதேபோன்று பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்ப்ரீத் பூம்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் இரண்டு இடங்கள் முன்னேறி 26-ஆவது இடத்தைப் பிடித்தார்.  சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திரே சாஹல் 22 இடங்கள் முன்னேறி 30 -வது இடத்தையும், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் 17 இடங்கள் முன்னேறி 62-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்தியாவிடம் நியூஸிலாந்து அணி தோல்வி அடைந்ததை அடுத்து, ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி முதலிடத்துக்கு முன்னேறியது.

முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்து அணி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மேற்கு இந்திய தீவுகள் அணி 3-வது இடத்திலும், இங்கிலாந்து 4-வது இடத்திலும் இந்தியா 3 புள்ளிகள் பெற்று, 5-வது இடத்திலேயே நீடிக்கிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

நியூசிலாந்து ஓடிஐ தொடரில் 2 இந்திய 'ஸ்டார்' வீரர்களுக்கு ஓய்வு.. ரசிகர்கள் ஷாக்.. பிசிசிஐ முடிவு!
சர்வதேச கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா.. சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்