ஆசிய மகளிர் குத்துச்சண்டை கிளைமாக்ஸ்: இந்தியாவின் மேரி கோம் தங்கம் வென்று கர்ஜணை…

Asianet News Tamil  
Published : Nov 09, 2017, 10:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
ஆசிய மகளிர் குத்துச்சண்டை கிளைமாக்ஸ்: இந்தியாவின் மேரி கோம் தங்கம் வென்று கர்ஜணை…

சுருக்கம்

Asian Women Boxing Climax India Marie Kom Gold Beats

ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

குத்துச்சண்டையில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரும், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர் மேரி கோம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி வியத்நாமில் நேற்று நடைபெற்து. இதன் இறுதிச்சுற்றில் 5-0 என்ற கணக்கில் வடகொரியாவின் கிம் ஹையாங் மியை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார் மேரி கோம்.

கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய மகளிர் குத்துச் சண்டையில் அவர் கைப்பற்றும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு 2003, 2005, 2010, 2012 நடைபெற்ற ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டிகளில் அவர் தங்கம் வென்றுள்ளார்.

அதேபோன்று 57 கிலோ எடைப் பிரிவில் சோனியா லேதரை வீழ்த்தி, சீனாவின் யின் ஜுன்ஹுவா தங்கம் வென்றார். சோனியா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

முன்னதாக, இப்போட்டியில் பங்கேற்றிருந்த இதர 5 இந்திய வீராங்கனைகள் வெண்கலப் பதக்கத்துடன் அரையிறுதியில் வெளியேறினர் என்பது கொசுறு தகவல்.

இந்தப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

WPL 2026: ஆர்சிபி ரசிகர்கள் ஷாக்.. ஸ்டார் வீராங்கனை திடீர் விலகல்.. டெல்லியிலும் முக்கிய மாற்றம்!
டி20 உலகக் கோப்பை.. ஸ்ட்ராங் டீமை களம் இறக்கும் இங்கிலாந்து.. ஆர்ச்சர் ரிட்டன்..!