
இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி ‘பாலி உம்ரிகர்” விருதை மூன்றாவது முறையும், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் “திலீப் சர்தேசாய்” விருதை இரண்டாவது முறையும் வாங்கப் போகின்றனர்.
பிசிசிஐ சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பாலி உம்ரிகர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், திலீப் சர்தேசாய் விருதுக்கு அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தியருக்கு வழங்கப்படும் விருதான பாலி உம்ரிகர் விருதை மூன்றாவது முறையாக பெறவுள்ளார் கோலி.
அவர், இதற்கு முன்னர் 2011-12, 2014-15 ஆகிய ஆண்டுகளில் மேற்கண்ட விருதைப் பெற்றுள்ளார்.
திலீப் சர்தேசாய் விருதை 2-ஆவது முறையாக பெறவுள்ள முதல் வீரர் அஸ்வின் ஆவார். இதற்கு முன்னர் 2011-இல் இந்த விருதைப் அஸ்வின் பெற்றுள்ளார்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு திலீப் சர்தேசாய் விருது வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் அஸ்வின் இரு சதங்களை விளாசியதோடு, 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தொடர் நாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.