
சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னை யுனைடெட் அணியிடம் 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கி அணி தோற்றது.
செயின்ட் ஜோசப் கல்வி குழும் - சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் நேற்று நடைபெற்ற சீனியர் டிவிஷன் லீக் முதல் ஆட்டத்தில் சென்னை யுனைடெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கி அணியைத் தோற்கடித்தது.
சென்னை யுனைடெட் தரப்பில் அனாஸ் நதானீல் (60-ஆவது நிமிடம்), அமோஸ் (66), சாந்தகுமார் (90+4) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.
இந்தியன் வங்கி தரப்பில் ஜோசப் ஒரு கோலடித்தார். அமோஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை சுங்கத் துறை - தெற்கு ரயில்வே இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 16-ஆவது நிமிடத்தில் தெற்கு ரயில்வே வீரர் சரத்ராஜ் கோலடிக்க, 25-ஆவது நிமிடத்தில் சுங்கத் துறை வீரர் ஸ்ரீராம் பதிலடி கொடுத்தார்.
இதன்பிறகு கோல் எதுவும் விழாததால் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
ஸ்ரீராம் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.