
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் ஆடவர் 50 மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜிது ராய் உலக சாதனையோடு தங்கமும், அமன்பிரீத் சிங் வெள்ளியும் வென்றனர்.
தில்லியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஜிது ராய் 230.1 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றதோடு, உலக சாதனையும் படைத்தார்.
இறுதிச் சுற்றில் நீண்ட நேரம் முன்னிலையில் இருந்த அமன்பிரீத் சிங் கடைசிக் கட்டத்தில் அதை இழந்து 226.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஈரானின் வஹித் கோல்கண்டன் 208 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் 10 மீ. பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்ற ஜிது ராய், இப்போது தங்கம் வென்றுள்ளார்.
இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் ஹீனா சித்துவுடன் இணைந்து தங்கம் வென்றார். அதனால் அது சோதனை அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டி என்பதால் அதில் வென்ற தங்கம் கணக்கில் கொள்ளப்படவில்லை.
மகளிர் 25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் முஸ்கான் 12-ஆவது இடத்தையும், சானியா ஷேக் 27-ஆவது இடத்தையும் பிடித்தனர். இதனால் அவர்கள் இருவரும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். இந்தப் போட்டியில் இதுவரை இந்தியா ஒரு தங்கம், இரு வெள்ளி, இரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது.
மகளிர் ஸ்கீட் பிரிவில் அமெரிக்க வீராங்கனை கிம்பெர்லி ரோட் 56 புள்ளிகளைப் பெற்று உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். தாய்லாந்தின் சுதியா (51) வெள்ளியும், நியூஸிலாந்தின் குளோ டிப்பிள் (42) வெண்கலமும் வென்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.