ரவி சாஸ்திரியின் சொந்த ஊர் நம்ம தஞ்சாவூரா..? மர்ம முடிச்சுகளை அவிழ்த்த கோலி

By karthikeyan VFirst Published Nov 16, 2018, 3:26 PM IST
Highlights

என்னதான் கோலி சிறந்த வீரராக இருந்தாலும் அவரிடம் சில விஷயங்களில் ஒரு பயிற்சியாளராக அனில் கும்ப்ளே கண்டிப்புடன் நடந்துகொண்டார். ஆனால் அனில் கும்ப்ளேவை கட்டம் கட்டி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக ஆதரவு தெரிவித்து அரவணைத்துக்கொண்டார் கோலி. 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கோலியின் எடுபிடி என்று ஓபனாக சொல்லாத குறையாக, அவர் மீது விமர்சனங்களும் அவர் மீதான ரசிகர்களின் பார்வையும் உள்ளது. 

இந்திய அணியின் கேப்டன் கோலி - தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் இணைந்து தன்னிச்சையாக செயல்படுகின்றனர். அதிலும் கோலியின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும், கோலி சொல்வதற்கு எல்லாமே ரவி சாஸ்திரி தலையாட்டுகிறார் என்றும் விமர்சனங்கள் உள்ளன. 

என்னதான் கோலி சிறந்த வீரராக இருந்தாலும் அவரிடம் சில விஷயங்களில் ஒரு பயிற்சியாளராக அனில் கும்ப்ளே கண்டிப்புடன் நடந்துகொண்டார். ஆனால் அனில் கும்ப்ளேவை கட்டம் கட்டி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக ஆதரவு தெரிவித்து அரவணைத்துக்கொண்டார் கோலி. கோலி சொல்வதற்கெல்லாம் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ரவி சாஸ்திரி மண்டையை ஆட்டுவதால்தான் அவரை பயிற்சியாளராக்கி பக்கத்திலேயே உட்கார வைத்துள்ளார் கோலி என்ற கருத்தும் பரவலாக எழுந்தது. 

கோலி சொல்வதற்கெல்லாம் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல் ரவி சாஸ்திரி மண்டையாட்டுகிறார் என்ற கருத்து ரசிகர்களிடையே வலுத்துள்ளது. இதை பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவே பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு கிளம்பும் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, இந்த கருத்தை கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. எனது கருத்தில் அதிகமாக முரண்பட்டு அதிகமான ஆலோசனைகளை வழங்கும் ஒரே நபர் ரவி சாஸ்திரிதான். நல்லதோ கெட்டதோ நேர்மையான கருத்தை கூறக்கூடியவர் ரவி சாஸ்திரி. அவரிடமிருந்து பொய்யாக நம்மை திருப்திப்படுத்தும் வார்த்தைகளே வராது. அவரது ஆலோசனைகளை கேட்டு எனது பெரும்பாலான அணுகுமுறைகளை மாற்றியுள்ளேன். எனது ஆட்டத்தை மேம்படுத்தவும் நிறைய ஆலோசனைகளை வழங்கியுள்ளார் ரவி சாஸ்திரி. இன்றைக்கு அணி சிறப்பான அணியாக திகழ்வதற்கு ரவி சாஸ்திரி தான் முக்கிய காரணம் என்று கோலி தெரிவித்தார். 

கோலி என்னதான் மறுத்தாலும் ஏற்கனவே ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்துவிட்ட கருத்தை மாற்ற முடியுமா..?
 

click me!