
சர்வதேச அளவில் சிறந்த கிரிக்கெட்டர் என்ற பெயர் பெற்றுள்ள கோலி, போட்டிக்கு போட்டி சாதனைகளையும் சதங்களையும் குவித்து வருகிறார். அதிலும் நடந்துவரும் தென்னாப்பிரிக்க தொடரில் பல்வேறு சாதனைகளை குவித்துள்ளார். மேலும் பல சாதனைகளை குவிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 558 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் 909 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டியில் 912 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தரவரிசைகளிலும் 900 புள்ளிகளை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெறுகிறார். இதுவரை 5 பேர் மட்டுமே ஒருநாள் மற்றும் டெஸ்ட் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்துள்ளனர். அந்த 5 பேரில் எந்த இந்திய வீரரும் இல்லை.
இந்த சாதனையை படைக்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.