
தனது பேட்டிங் திறமையால் ஒவ்வொரு போட்டியிலும் சாதனை நிகழ்த்திவரும் கோலி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் சாதனை நிகழ்த்த தவறவில்லை. கேப்டனாக அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தது. ஆனால் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
முதல் 3 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ள இந்திய அணி, தொடரை வெல்ல இன்னும் ஒரே ஒரு போட்டியில் வென்றால் போதும்.
முதல் மூன்று போட்டிகளிலும் சாஹல், குல்தீப் ஆகியோர் பவுலிங்கில் மிரட்ட, வழக்கம்போல கேப்டன் கோலி கேப்டன் கோலி பேட்டிங்கில் மிரட்டிவிட்டார். முதல் போட்டியில் சதமடித்து, வெற்றிக்கு வித்திட்ட கோலி, நேற்றைய போட்டியிலும் அபார சதம் அடித்தார்.
இது கோலியின் 34வது சர்வதேச ஒருநாள் சதமாகும். நேற்றைய சதத்தின் மூலம் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் கோலி. கேப்டனாக ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.
இதுவரை கேப்டனாக 43 போட்டிகளில் 12 சதங்களை கோலி அடித்துள்ளார். இதற்கு முன்னதாக முன்னாள் கேப்டன் கங்குலி, கேப்டனாக 142 போட்டிகளில் 11 சதத்தை பதிவு செய்தார். ஆனால் கோலியோ வெறும் 43 போட்டிகளில் 12 சதங்களை அடித்து, கங்குலியை முந்திவிட்டார்.
சர்வதேச அளவில் கோலிக்கு முன்னதாக 22 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் முதலிடத்திலும் 13 சதங்களுடன் டிவில்லியர்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
கோலிக்கு முன்னாள் இருக்கும் இருவருமே தற்போது கேப்டனாக இல்லாததால், இந்த பட்டியலில் கோலி விரைவில் முதலிடம் பிடித்து விடுவார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.