ஒலிம்பிக் போட்டியில் என்னை தேர்வு செய்யாவிட்டல் தற்கொலை செய்து கொள்வேன் - தடகள வீராங்கனை வருத்தம்...

Asianet News Tamil  
Published : Feb 08, 2018, 12:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
ஒலிம்பிக்  போட்டியில் என்னை தேர்வு செய்யாவிட்டல் தற்கொலை செய்து கொள்வேன் - தடகள வீராங்கனை வருத்தம்...

சுருக்கம்

I will commit suicide if I do not choose me in the Olympic Games - the athlete sadness ...

பாரா ஒலிம்பிக் போட்டியில் தனது பெயரை சேர்க்காவிட்டால் இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம்  முன்னால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பாரா பளுதூக்கும் வீராங்கணை சாகினா காதூன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.  

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 2018-ஆம் ஆண்டின் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல்  பாரா பளுதூக்கும் வீராங்கணை சாகினா காதூன் சேர்க்கப்படவில்லை.  

இதுகுறித்து பாரா பளுதூக்கும் வீராங்கணை சாகினா காதூன், "தனது பெயர் பார ஒலிம்பிக் போட்டிக்கு பரிசீலிக்கப்படவில்லை என்றால் இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம்  முன் தற்கொலை செய்து கொள்வேன்.

என் பெயரை இன்னும் பட்டியலில் சேர்க்கும் வரை காத்திருக்கிறேன். நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். நான் கடைசி வரை  போராடுவேன், பிறகு என் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால்,  நான் நீதிமன்றத்திற்கு செல்வேன். ஏன் என்றால் அவர்கள் என் வாழ்க்கையை பாழாக்கி விட்டனர். நான் இதை விட்டுவிட மாட்டேன்.

இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம்  முன்னால் தற்கொலை கூட செய்து கொள்வேன். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த விளையாட்டுகளுக்கு நான் காத்திருக்கிறேன். இதனால் நான்  மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறேன். இதற்காக நான் மிகவும் கடினமாக பயிற்சி செய்தேன்" என்று வருத்தத்துடன் கூறினார்.

காமன் வெல்த் போட்டியில்  தனது பெயரை சேர்த்துக் கொள்ள  இந்தியாவின் பாரா ஒலிம்பிக் கமிட்டிக்கு   ஒரு கடிதத்தையும் அவர் எழுதியுள்ளார். பாரா ஒலிம்பிக் கமிட்டியும்  இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு  சாகினாவை சேர்த்து கொள்ள பரிந்துரைத்துள்ளது. ஆனால், இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

28 வயதாகும் சாகினா காதூன் காமன் வெல்த் போட்டியில் லைட் வெயிட் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs WI: இந்தியாவுக்கு முக்கியமான போட்டி; ஒருவேளை மழையால் ரத்தானால் என்னாகும்? அரையிறுதி வாய்ப்பு பறிபோகுமா?
ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளிய இந்தியா.. அரையிறுதி செல்ல இனி என்ன செய்ய வேண்டும்?