இந்தியாவை படுத்தி எடுத்த இங்கிலாந்து ஆல்ரவுண்டருக்கு கடும் கிராக்கி!! ரூ.7.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

By karthikeyan VFirst Published Dec 18, 2018, 6:58 PM IST
Highlights

ரூ.36.2 கோடி என்ற அதிக தொகையை கையிருப்பில் வைத்திருந்த பஞ்சாப் அணி, ஐபிஎல் ஏலத்தில் சில முக்கியமான சிறந்த வீரர்களை வாரி குவித்து வருகிறது. 
 

ரூ.36.2 கோடி என்ற அதிக தொகையை கையிருப்பில் வைத்திருந்த பஞ்சாப் அணி, ஐபிஎல் ஏலத்தில் சில முக்கியமான சிறந்த வீரர்களை வாரி குவித்து வருகிறது. 

ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலம் பிற்பகம் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்த ஏலத்திற்கு அதிகமான தொகையுடன் வந்த அணி பஞ்சாப் தான். ரூ.36.2 கோடி கையிருப்புடன் ஏலத்திற்கு வந்தது பஞ்சாப் அணி. அந்த அணியில் 10 வீரர்கள் மட்டுமே ஏற்கனவே இருந்ததால் 4 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 11 இந்திய வீரர்கள் என மொத்தம் 15 வீரர்களை எடுக்கலாம் என்ற நிலையில் ஏலத்திற்கு வந்தது. 

ஹெட்மயரை எடுக்க முனைந்த பஞ்சாப் அணி, அவருக்கான ஏலத்தொகை ஏறிக்கொண்டே சென்றதால் அவரை விட்டது. அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸின் மற்றொரு அதிரடி வீரரும் ஆல்ரவுண்டருமான நிகோலஸ் பூரானை எடுத்தது. மேலும் 8.4 கோடி ரூபாய்க்கு தமிழ்நாட்டு மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை எடுத்தது. 

இதையடுத்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனை மற்ற அணிகளுடன் கடும் போட்டியிட்டு ரூ.7.2 கோடிக்கு எடுத்தது பஞ்சாப் அணி. சாம் கரன் ஒரு நல்ல ஆல்ரவுண்டர். அண்மையில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடியது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என இந்திய அணி இழந்தது. இந்திய அணி அந்த தொடரை இழந்ததற்கு சாம் கரனும் ஒரு முக்கிய காரணம். சாம் கரன் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடினார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அசத்தினார். 

இந்திய அணி பல இன்னிங்ஸ்களில் இங்கிலாந்தின் டாப் ஆர்டர்களை சரித்துவிட்டது. பின்வரிசையில் இறங்கிய சாம் கரன், இந்திய அணியின் பந்துவீச்சின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடி, இந்திய அணியிடமிருந்து வெற்றியை பறித்தார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் இரு அணிகளுக்கும் இடையேயான மிகப்பெரிய வித்தியாசமாக திகழ்ந்தவர் சாம் கரன் தான். இந்நிலையில், சாம் கரனை நம்பி அவரை 7.2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி எடுத்துள்ளது. 
 

click me!