2025 கோ கோ உலகக் கோப்பையில் இந்தியாவில் ஜனவரி 13 முதல் 19 வரை நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா உள்பட 39 நாடுகள் பங்கேற்கின்றன.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2025 கோ கோ உலகக் கோப்பை ஜனவரி 13 முதல் 19 வரை புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டி உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 கோ கோ உலகக் கோப்பையில் இந்தியா உட்பட 39 நாடுகள் பங்கேற்கின்றன. கோ கோ போட்டியை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக கொண்டு செல்வதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். இந்தப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் இடம்பெறும்.
2025 கோ கோ உலகக் கோப்பையின் தொடக்க விழா ஜனவரி 13 அன்று நடைபெறும். இதைத் தொடர்ந்து இந்திரா காந்தி விளையாட்டரங்கில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையேயான தொடக்க ஆட்டம் நடைபெறும். அனைத்து போட்டிகளும் ஒரே இடத்தில் நடைபெறும்.
Just 5️⃣ days left until the action kicks off at the inaugural !🔥
Catch every update on our official website/app & book your free tickets now!
வலை: https://t.co/fKFdZBc2Hy அல்லது பதிவிறக்கவும் 📲 Android 👉… pic.twitter.com/LowpJGdqec
— Kho Kho World Cup India 2025 (@Kkwcindia)
ஆண்கள் போட்டி:
ஆண்களுக்கான போட்டியில், குரூப் ஏ, பி, சி, டி என நான்கு குழுக்கள் உள்ளன, ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதியில் தொடங்கி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். இந்தியாவைப் பொறுத்தவரை, போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நேபாளத்தை எதிர்கொள்கிறது.
குழு A : இந்தியா, நேபாளம், பெரு, பிரேசில், பூட்டான்
குழு B : தென்னாப்பிரிக்கா, கானா, அர்ஜென்டினா, நெதர்லாந்து, ஈரான்
குழு C : வங்கதேசம், இலங்கை, தென் கொரியா, அமெரிக்கா, போலந்து
குழு D: இங்கிலாந்து, ஜெர்மனி, மலேசியா, ஆஸ்திரேலியா, கென்யா
பெண்கள் போட்டி:
பெண்கள் போட்டியில், நான்கு குழுக்கள் உள்ளன. இருப்பினும், டி குழுவில் ஐந்து அணிகள் உள்ளன. நான்கு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றில் விளையாடும். ஜனவரி 13ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தொடக்க ஆட்டம் நடைபெறவுள்ளது. தொடக்க நாளில் இந்தியா தென் கொரியாவுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடும்.
குழு A : இந்தியா, ஈரான், மலேசியா, தென் கொரியா
குழு B : இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கென்யா, உகாண்டா, நெதர்லாந்து
குழு C : நேபாளம், பூட்டான், இலங்கை, ஜெர்மனி, பங்களாதேஷ்
குழு D : தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, போலந்து, பெரு, இந்தோனேஷியா
லீக் போட்டிகள் ஜனவரி 16ஆம் தேதி முடிவடையும். பின் நாக் அவுட் போட்டிகள் ஜனவரி 17ஆம் தேதி தொடங்கும். ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் இறுதி மோதல் ஜனவரி 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
நேரலை ஒளிபரப்பு:
கோ கோ உலகக் கோப்பை 2025 போட்டிகள் காலை 10:30 மணிக்கு தொடங்கி இரவு 9:30 மணி வரை நடைபெறும்.
கோ கோ உலகக் கோப்பை 2025 போட்டி அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பிரத்தியேகமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். OTT இல் பார்க்க விரும்புவோர் டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளம் மூலம் பார்க்கலாம்.