'விராட் கோலி ஆஸி. வீரருடன் மோதியிருக்கக் கூடாது'; சுனில் கவாஸ்கர் ஓபன் டாக்!

Published : Jan 07, 2025, 06:16 PM IST
'விராட் கோலி ஆஸி.  வீரருடன் மோதியிருக்கக் கூடாது'; சுனில் கவாஸ்கர் ஓபன் டாக்!

சுருக்கம்

ஆஸ்திரேலிய வீரர் சாம் காண்ஸ்டாஸுடன் விராட் கோலி மோதியிருக்கக் கூடாது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஸ்மித்தையும் கிண்டல் செய்திருக்க கூடாது என்றும் கூறியுள்ளார். 

விராட் கோலி சாம் கான்ஸ்டாஸ் மோதல் 

இரு மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் முடிந்து விட்டது. இந்த தொடரை ஆஸ்திரேலியா 3 1 என்ற கணக்கில் வென்று விட்டது. இந்த தொடர் முழுவதும் விராட் கோலி பேட்டிங்கில் சொதப்பிய நிலையில், அவருக்கும் ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் காண்ஸ்டாஸ்க்கும் இடையே நடந்த மோதல் ஹாட் டாபிக் ஆனது. அதாவது மெல்போர்னில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் ஒரு ஓவர் முடிவில் மறுமுனைக்கு சென்றார்.  

அப்போது அவருக்கு நேராக நடந்து வந்த விராட் கோலி சாம் கான்ஸ்டாஸின் தோளின் மீது இடித்தபடி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாம் கான்ஸ்டாஸ் கோலியிடம் சில வார்தைகளை பேசினார். தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவான நிலையில், நடுவர்கள், சக வீரர்கள் தலையிட்டு பிரச்சனையை முடித்து வைத்தனர். இதேபோல் கடைசி சிட்னி டெஸ்ட்டில் விராட் கோலி ஸ்டீவ் ஸ்மித்தை கிண்டல் செய்ததும் வைரலானது.

ஸ்மித்தை கிண்டல் செய்த கோலி

சிட்னி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா பேட்டிங்கின்போது ஸ்டீவ் ஸ்மித் பிரசித் கிருஷ்ணா பந்தில் கேட்ச் ஆனார். அப்போது விரார் கோலி, தனது பேண்ட்டில் இரண்டு பாக்கெட்டிலும் கையை விட்டு காலி பாக்கெட்டுகளை ரசிகர்களுக்குக் காட்டினார். "என் பாக்கெட்டில் ஏதும் இல்லை'' என்பதுபோல் அவரது செயல் இருந்தது. 

ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2018ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது உப்புத்தாள் தேய்த்து பந்தை சேதப்படுத்தியதால் கையும், களவுமாக சிக்கினார். அவருக்கு 9 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதை இண்டல் செய்யும்விதமாக விராட் கோலி ரசிகர்களிடம் தனது பாக்கெட்டில் கையை விட்டு நான் இதுபோல் ஏதும் செய்யவில்லை என்பதுபோல் கூறியுள்ளார். 

சுனில் கவாஸ்கர் விமர்சனம் 

விராட் கோலி இப்படி செய்தது தவறு இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில், ''விராட் கோலி அதை ஒருபோதும் செய்திருக்கக் கூடாது. கோலியின் செயல் அணி உறுப்பினர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதேபோல் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் தோளில் அடித்த கோஹ்லியின் செயலும் சரியில்லை. 

இது கிரிக்கெட்டுக்கு தேவையில்லை. எதிரணி வீரர்கள் சீண்டினால் திருப்பி அடிப்பது புரிகிறது. ஆனால் இந்த இடத்தில் ஆக்ரோஷம் தேவையில்லை. ரசிகர்கள் உங்களுக்கு எதிராக கூச்சலிடலாம். நீங்கள் அதற்கு எதிர்வினையாற்றுவதை நிறுத்தினால் உங்கள் ஆட்டத்தில் நீங்கள் கவனம் செலுத்த முடியும். இது அணிக்கும் நல்லது. ஏனெனில் கோலி இந்த தொடரில் அணியின் ரன் பங்களிப்பு பெரிய அளவில் உதவி செய்யவில்லை'' என்றார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

எல்லை மீறிய ரசிகர்.. பொறுமை இழந்த பும்ரா.. கடும் கோபத்தில் செய்த செயல்.. வைரலாகும் சம்பவம்!
4வது டி20 ரத்து: மேட்ச் தான் நடக்கலயே.. டிக்கெட் பணத்தை திருப்பி கொங்க.. ரசிகர்கள் ஆதங்கம்