உமேஷ் யாதவிடம் சரணடைந்த கேரளா.. லன்ச்சுக்கு முன்னாடியே மொத்தமும் முடிஞ்சு போச்சு!!

By karthikeyan VFirst Published Jan 24, 2019, 5:35 PM IST
Highlights

கேரள அணி தொடக்கம் முதலே மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. 4வது ஓவரில் அந்த அணியின் முதல் விக்கெட் விழுந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்தன. அந்த அணியின் கேப்டன் சச்சின் பேபி, விக்கெட் கீப்பர் விஷ்ணு வினோத் மற்றும் பாசில் தம்பி ஆகிய மூவர் மட்டுமே இரட்டை இலக்கத்தையே எட்டினர். 

ரஞ்சி தொடரின் அரையிறுதியில் கேரளா அணி உமேஷ் யாதவின் வேகத்தில் வெறும் 106 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது. 

ரஞ்சி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி போட்டிகள் நடந்துவருகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கர்நாடகா மற்றும் சவுராஷ்டிரா அணிகள் மோதிவருகின்றன. 

கேரள மாநிலம் வயநாட்டில் நடந்துவரும் மற்றொரு அரையிறுதி போட்டியில் கேரளா மற்றும் விதர்பா அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி பவுலிங் தேர்வு செய்ததால் கேரள அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

கேரள அணி தொடக்கம் முதலே மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. 4வது ஓவரில் அந்த அணியின் முதல் விக்கெட் விழுந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்தன. அந்த அணியின் கேப்டன் சச்சின் பேபி, விக்கெட் கீப்பர் விஷ்ணு வினோத் மற்றும் பாசில் தம்பி ஆகிய மூவர் மட்டுமே இரட்டை இலக்கத்தையே எட்டினர். எஞ்சிய வீரர்கள் அனைவருமே ஒற்றை இலக்கத்திலும் டக் அவுட்டாகியும் வெளியேறினர். உமேஷ் யாதவின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் அவரது பவுலிங்கில் மட்டுமே 7 வீரர்கள் ஆட்டமிழந்தனர். 

12 ஓவர்கள் மட்டுமே வீசிய உமேஷ் யாதவ், 48 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏற்கனவே மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 74 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே ரஞ்சி தொடரில் உமேஷ் யாதவின் சிறந்த பவுலிங்காக இருந்தது. தற்போது அதை மிஞ்சிய ஒரு ஸ்பெல்லை போட்டுள்ளார் உமேஷ். 

உமேஷிடம் சரணடைந்த கேரள அணி, வெறும் 29 ஓவர்களுக்கு 106 ரன்களில் முதல் இன்னிங்ஸை இழந்தது. முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே கேரள அணியின் முதல் இன்னிங்ஸ் முடிந்துவிட்டது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய விதர்பா அணி, முதல் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்துள்ளது. 
 

click me!