உலக கோப்பைக்கு அவங்க 2 பேரும் போதும்.. அந்த பையன் அவரோட வாய்ப்புக்காக வெயிட் பண்ணலாம்!! காம்பீர் அதிரடி

By karthikeyan VFirst Published Jan 24, 2019, 4:03 PM IST
Highlights

பொதுவாக வலுவான பேட்டிங் அணியாகவே அறியப்பட்ட இந்திய அணி, பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோரின் இருப்பால் தற்போது வலுவான பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சம பலம் வாய்ந்த அணியாக இந்திய அணி திகழ்கிறது. 
 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் அதற்காக தீவிரமாக தயாராகிவருகின்றன.

2019 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பார்க்கப்படுகின்றன. இந்த 2 அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் ஆருடம் தெரிவித்துள்ளனர். 

பொதுவாக வலுவான பேட்டிங் அணியாகவே அறியப்பட்ட இந்திய அணி, பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோரின் இருப்பால் தற்போது வலுவான பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சம பலம் வாய்ந்த அணியாக இந்திய அணி திகழ்கிறது. 

ஓரளவிற்கு உலக கோப்பையில் ஆடும் இந்திய அணி உறுதி செய்யப்பட்ட போதிலும் ஒன்றிரண்டு மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த தோனி, ஆஸ்திரேலிய தொடரில் ஹாட்ரிக் அரைசதமடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலம். அதேபோல மாற்று விக்கெட் கீப்பிங் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங்கிற்காக தினேஷ் கார்த்திக்கும் அணியில் உள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தோனி, தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருந்தனர். இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் உலக கோப்பையில் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இந்த இரண்டு தொடர்களுக்கான அணியில் இல்லை. 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அதில் ஆடும் வீரர்களை மனதில் வைத்துத்தான் இந்த தொடர்களுக்கான அணி தேர்வு செய்யப்பட்டிருக்கும் என்பதால், அதில் ரிஷப் பண்ட் இல்லாததால், அவர் உலக கோப்பை அணியில் இருக்கமாட்டார் என கருதப்பட்டது. ஆனால் ரிஷப் பண்ட்டிற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் ஓய்வு மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும் உலக கோப்பை அணியில் அவர் கண்டிப்பாக இருப்பார் என்றும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் ரிஷப் பண்ட் உலக கோப்பை அணியில் இடம்பெறுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவுதம் காம்பீர், தோனியும் தினேஷ் கார்த்திக்கும் அணியில் உள்ளனர். எனவே ரிஷப் பண்ட்டும் சேர்க்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ரிஷப் பண்ட் அவருக்கான வாய்ப்புக்காக காத்திருக்கலாம். டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் நன்றாக ஆடினார். ஆனால் தோனி இந்திய அணிக்கு கண்டிப்பாக தேவை. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், தோனி, தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் அணியில் இருக்க வேண்டும். எனவே ரிஷப் பண்ட் அவருக்கான வாய்ப்புக்காக காத்திருக்கலாம் என்று காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!