2-வது முறையாக கேரளா தோல்வி…

Asianet News Tamil  
Published : Oct 07, 2016, 03:04 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
2-வது முறையாக கேரளா தோல்வி…

சுருக்கம்

3–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி தொடரில் கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 5–வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.–அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதின. கேரளா அணி முதல் ஆட்டத்தில் கவுகாத்தியிடம் தோல்வி கண்டு இருந்ததால் அந்த அணியில் 6 வீரர்கள் மாற்றப்பட்டனர். கொல்கத்தா அணி வீரர் ஹெல்டெர் போஸ்டிகா 17–வது நிமிடத்தில் காயம் அடைந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக ஜூயன் பெலென்கோசா களம் இறங்கினார். 

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 54–வது நிமிடத்தில் கொல்கத்தா அணி முதல் கோல் போட்டது, மாற்று ஆட்டக்காரர் பெலென்கோசா கடத்தி கொடுத்த பந்தை ஜாவியர் லாரா (ஸ்பெயின்) கோலாக்கினார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆடிய கேரளா அணி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சி கடைசி வரை கைகூடவில்லை. 

முடிவில் கொல்கத்தா அணி 1–0 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் சென்னையுடன் டிரா (2–2) கண்டு இருந்தது. கேரளா அணி தொடர்ந்து சந்தித்த 2–வது தோல்வி இதுவாகும்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: அந்த 'A' செலிப்ரேஷன்... சீக்ரெட்டை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி!
Vaibhav Sooryavanshi: 15 வயதில் ருத்ரதாண்டவம்! கெயில் சாதனையை காலி செய்யபோகும் சூர்யவன்ஷி! ப்ளே-ஆஃப் சுற்றில் RR!