
2016-17-ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை ஆட்டங்கள் பல்வேறு பகுதிகளில் இன்று தொடங்குகிறது.
உள்நாட்டு தொடர்களில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடரில் தமிழக அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் மும்பை, ரயில்வே, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பரோடா, பெங்கால், பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் உள்ளன.
தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் வலுவான மும்பை அணியை இன்று எதிர்கொள் கிறது. ரோஹ்டக்கில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.
தமிழக அணி விவரம்:
அபினவ் முகுந்த் (கேப்டன்), அபராஜித், இந்திரஜித், வாஷிங்டன் சுந்தர், ஜெகதீசன், தினேஷ் கார்த்திக், கவுசிக், சூர்ய பிரகாஷ், ரகில், ரங்கராஜன், அவுசிக் நிவாஸ், அஸ்வின் கிறிஸ்ட், முகமது, விக்னேஷ், நடராஜன், கவுசிக் காந்தி.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.