சென்னை எப்.சி – டெல்லி இன்று மோதல்…

 
Published : Oct 07, 2016, 02:57 AM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
சென்னை எப்.சி – டெல்லி இன்று மோதல்…

சுருக்கம்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி, டெல்லி டைனமோஸ் எப்சி அணியை எதிர்கொள்கிறது.

சென்னை அணி இந்த சீசனில் நட்சத்திர வீரர்களான மெண்டோசா, எலானோ புளூமர் இல்லாமல் விளையாடி வருகிறது. கொல்கத்தாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தை சென்னை அணி டிரா செய்திருந்தது.

இந்த ஆட்டத்தில் ஆதிக்க நிலையில் இருந்த சென்னை அணி கடைசி கட்டத்தில் செய்த தவறால் கொல்கத்தா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனால் கொல்கத்தா அணி போட்டியை 2-2 என்ற கணக்கில் டிராவில் முடித்தது.

சென்னை அணியின் நட்சத்திர வீரராக ஜான் ஆர்னே ரிஸி உள்ளார். ஜெயேஷ் ரானே, முர்டர், பெர்னார்டு மென்டி, மவுரிஸியோ பெலுசோ, சக்சி, டுடு ஓமக்பெமி, ஜிஜி ஆகியோருடன் சொந்த மண்ணில் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் சென்னையின் எப்சி அணி இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது.

இரு அணிகளும் கடந்த சீசன்களில் 4 முறை மோதி உள்ளன. இதில் டெல்லி அணி இரு ஆட்டங்களிலும், சென்னை அணி ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டிராவில் முடிவடைந்திருந்தது.

டெல்லி அணி முதல் சீசனில் 5-வது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருந்தது. கடந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி அரை இறுதி வரை முன்னேறி இருந்தது.

இந்த சீசனில் அந்த அணிக்கு இது முதல் ஆட்டமாகும். புதிய பயிற்சியாளரான இத்தாலியை சேர்ந்த கியான்லூகா ஜம்போர்ட் டாவின் மேற்பார்வையில் டெல்லி அணி சிறந்த முறையில் தயாராகி உள்ளது.

கியான்லூகாவும், சென்னை அணியின் பயிற்சியாளர் மார்க்கோ மெட்டராஸியும் 2006-ல் உலகக் கோப்பையை வென்ற இத்தாலி அணியில் இடம் பெற்றிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்டராஸி 3-வது ஆண்டாக சென்னை அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வரும் நிலையில் கியன்லூகா தற்போதுதான் பயிற்சியாளர் பணியை இந்திய மண்ணில் தொடங்க உள்ளார்.

இரவு 7 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!
அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!