
சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 2–வது இடத்தில் இருக்கும் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 6–2, 6–1 என்ற நேர்செட்டில் ரஷிய வீரர் ஆந்த்ரே குஸ்னெட்சோவை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் 6–3, 6–4 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் பாபி போக்னியை சாய்த்து கால் இறுதிக்குள் நுழைந்தார். இங்கிலாந்து வீரர்கள் கெய்ல் எட்முன்ட், அலெக்சாண்டர் ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 11–வது இடத்தில் இருக்கும் கிவிடோவா (செக் குடியரசு) 6–1, 6–4 என்ற நேர்செட்டில் தர வரிசையில் 4–வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 7–6 (7–2), 6–2 என்ற நேர்செட்டில் ரஷிய வீராங்கனை ஸ்வெட்லானா குஸ்னெட்சோவாவை சாய்த்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.