உலக கோப்பையில அந்த பையன் ஆடுறத பார்க்க எனக்கு ஆசையா இருக்கு!! கபில் தேவ் விருப்பத்தை நிறைவேற்றுமா பிசிசிஐ?

By karthikeyan VFirst Published Sep 30, 2018, 4:29 PM IST
Highlights

உலக கோப்பையில் இளம் வீரர் கேஎல் ராகுல் ஆடுவதை காண ஆவலாக உள்ளதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். 
 

உலக கோப்பையில் இளம் வீரர் கேஎல் ராகுல் ஆடுவதை காண ஆவலாக உள்ளதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். 

உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ள நிலையில், உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு சரியான வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்திய அணியில் தொடக்க வீரர்கள் நிரந்தரமாக உள்ளனர். ரோஹித்தும் தவானும் நல்ல ஃபார்மில் உள்ளனர். மூன்றாவது வரிசையில் கேப்டன் கோலி உள்ளார்.

மிடில் ஆர்டரில் 5ம் வரிசையில் தோனி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 மற்றும் 6வது வரிசை வீரர்களுக்குத்தான் கடும் போட்டி நிலவுகிறது. ராகுல், ராயுடு, மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ரெய்னா ஆகிய வீரர்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இவர்களில் மிடில் ஆர்டருக்கு சரியான வீரர்களை தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் தேர்வுக்குழு உள்ளது. 

இந்திய அணி கோலியை சார்ந்திருப்பதாக ஒரு கருத்து பரவலாக இருந்தது. ஆனால் இந்திய அணி கோலியை மட்டுமே சார்ந்திருக்கவில்லை என ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பையை வென்று நிரூபித்தது. 

ஆசிய கோப்பை வெற்றி இந்திய அணிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. உலக கோப்பைக்கு முந்தைய மிகப்பெரிய தொடர் என்பதால் அந்த வெற்றி இந்திய அணிக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது. 

இந்நிலையில், உலக கோப்பை தொடரில் ராகுல் ஆடுவதை பார்க்க ஆவலாக இருப்பதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல்லில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ராகுல். ஆசிய கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ராகுல், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே களமிறக்கப்பட்டார். அதிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 

ராகுல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். ஆனால் இந்திய அணியில் ரோஹித் - தவான் நிரந்தர தொடக்க ஜோடியாக இருப்பதால் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்துவருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள கபில் தேவ், உலக கோப்பையில் ராகுல் ஆடுவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். ராகுல் உலக கோப்பையில் ஆடுவது அணிக்கு நல்லது. உலக கோப்பைக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால் ராகுலை அணியில் சேர்ப்பதற்கு நிர்வாகம் நடவடிக்கைகளையும் முயற்சியையும் எடுக்க வேண்டும். தொடக்க வீரராக இல்லாவிட்டாலும் மிடில் ஆர்டரில் ராகுலை சேர்க்க முயற்சிக்க வேண்டும் என கபில் தேவ் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!