
சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தின் இளவேனில் வலரிவன் தங்கம் வென்று அசத்தினார்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தின் இளவேனில் வலரிவன் கலந்து கொண்டார்.
இந்தப் போட்டியின் மகளிருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இளவேனில் வலரிவன் தங்கம் வென்றார். மேலும், தகுதிச்சுற்றின்போது 631.4 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையும் படைத்தார்.
தனது 2-வது உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள இளவேனில், இறுதிச்சுற்றில் 249.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அவரே, அணிகளுக்கான பிரிவில் ஷ்ரேயா அகர்வால், ஜீனா கிட்டா ஆகியோருடன் இணைந்து 2-வது தங்கத்தையும் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, ஆடவருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் பபுதா வெண்கலப் பதக்கம் வென்றார்.
அதே பிரிவில் இதர இந்தியர்களான சூர்ய பிரதாப் சிங் 6-வது இடத்திலும், சாஹு துஷார் மனே 8-வது இடத்திலும் நிறைவு செய்தனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.