வளைந்து கொடுக்காமல் ஆடி வெற்றியைப் பிடித்தது இந்திய அணி…

 
Published : Mar 03, 2017, 12:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
வளைந்து கொடுக்காமல் ஆடி வெற்றியைப் பிடித்தது இந்திய அணி…

சுருக்கம்

Jul intransigent Indian team took the victory

பெல்ஜியத்துக்கு எதிரான முதல் வலைகோற்பந்து ஆட்டத்தில் வளைந்து கொடுக்காமல் ஆடி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது இந்திய மகளிர் அணி.

பெல்ஜியம் – இந்தியா அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஹாக்கி டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய இந்திய அணி 11-ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் முதல் கோலை அடித்தது.

அதைத் தொடர்ந்து 15-ஆவது நிமிடத்தில் அடுத்த கோலை அடித்தது.

இந்த இரு கோல்களையும் நவ்ஜோத் கெளர் அடித்தார்.

பின்னர் நடைபெற்ற 2-ஆவது கால் ஆட்டத்தின் 29-ஆவது நிமிடத்தில் பூனம் பர்லா கோலடிக்க, இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது.

3-ஆவது கால் ஆட்டத்தின் 37-ஆவது நிமிடத்தில் பெலாரஸின் ஸ்வியத்லானா கோலடித்தார்.

இதன்பிறகு நடைபெற்ற 4-ஆவது கால் ஆட்டத்தின் 57 மற்றும் 60-ஆவது நிமிடங்களில் முறையே இந்தியாவின் தீப் கிரேஸ் இக்கா, குர்ஜித் கெளர் ஆகியோர் கோலடிக்க, இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!
T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு