
மாண்டேகார்லோ ஏடிபி டென்னிஸ் போட்டிகளில் உலகின் முன்னாள் முதல்நிலை வீரர் ஜோகோயிச் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பன்னிரெண்டு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோயிச் காயம் காரணமாக நீண்ட காலமாக போட்டிகளில் பங்கேற்கில்லை.
இந்நிலையில் மாண்டேகார்லோ ஏடிபி டென்னிஸ் தொடரில் பங்கேற்ற அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 7-ம் நிலை வீரர் டொமினிக்குடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 6-7, (2/7), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோயிச்.
அதேபோன்று, முதல்நிலை வீரரான நடால், ரஷிய வீரர் காரேன் கச்சனொவுடன் மோதி 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார். நடால் தனது காலிறுதியில் டொமினிக் எதிர்கொள்வார்.
இரண்டாம் நிலை வீரர் மரின் சிலிச், டேவிட் கோபின், அலெக்சாண்டர் வெரேவ் உள்ளிட்டோரும் காலிறுதிக்கு முன்னேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.