ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார் ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா..!

By karthikeyan VFirst Published Jul 23, 2021, 9:36 PM IST
Highlights

டோக்கியோ ஒலிம்பிக் தீபத்தை ஜப்பானை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா ஏற்றினார்.
 

இந்தியா உட்பட 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு ஆடுகின்றனர். இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள் 18 போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

ஒலிம்பிக் அணிவகுப்பில், ஜப்பானிய எழுத்துவரிசைப்படி, 21வது நாடாக இந்தியா அணிவகுத்து சென்றது. இந்தியா சார்பில் 19 வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பில் கலந்துகொண்டனர். இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் இந்திய தேசிய கொடியை ஏந்திச்சென்றனர்.

ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக், ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

ஒலிம்பிக் தீபத்தை உலக டென்னிஸ் தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள ஜப்பானை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா ஏற்றிவைத்தார். 

கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் ஜப்பான் டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா, மொத்தமாக 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். சொந்த மண்ணில் நடக்கும் ஒலிம்பிக்கில் ஜப்பானுக்காக டென்னிஸில் முதல் தங்கம் வெல்லும் வீராங்கனை என்ற சாதனையை படைக்கும் முனைப்பில் இருப்பவர் நவோமி ஒசாகா.
 

click me!