டோக்கியா ஒலும்பிக்: இந்தியாவிற்கு மட்டும் மிகக்கடும் கட்டுப்பாடுகள்.! இந்தியா அதிருப்தி

By karthikeyan VFirst Published Jun 20, 2021, 8:00 PM IST
Highlights

ஒலிம்பிக்கில் ஆடும் இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மிகக்கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது, ஒருதலைபட்சமான நடவடிக்கை என்று இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.
 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடக்கிறது. ஒலிம்பிக்கின்போது கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை ஜப்பான் வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக இருந்த நிலையில், தற்போது வெகுவாக கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனாலும் இந்தியாவிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்:

* ஒலிம்பிக்கில் ஆட இந்தியாவிலிருந்து கிளம்புவதற்கு முன், தொடர்ச்சியாக 7 நாட்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

* ஜப்பானுக்கு கிளம்புவதற்கு முந்தைய 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். யாருடனும் தொடர்பில் இருக்கக்கூடாது.

* டோக்கியோவிற்கு வந்தபிறகும் கூட, மற்ற நாட்டு வீரர்கள் யாருடனும் தொடர்பில் இருக்கக்கூடாது. 

* ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் அனைத்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகிய அனைவருக்கும் தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

* டோக்கியோவை சென்றடைந்த அடுத்த 3 நாட்களுக்கு யாருடனும் தொடர்புகொள்ளக்கூடாது.

* விளையாட்டு வீரர்கள் அவர்களது போட்டி நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன் தான் ஒலிம்பிக் வில்லேஜுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேற்கூறிய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
 

click me!