மோதலை விரும்பும் கோலி.. அதுதான் எனக்கு அவருகிட்ட புடிச்சதே!! ஆண்டர்சனை கவர்ந்த விராட்

By karthikeyan VFirst Published Sep 11, 2018, 11:28 AM IST
Highlights

சமகால கிரிக்கெட்டில் எந்த பேட்ஸ்மேனுக்கு பந்துவீசுவதை அதிகம் விரும்புவதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். 
 

சமகால கிரிக்கெட்டில் எந்த பேட்ஸ்மேனுக்கு பந்துவீசுவதை அதிகம் விரும்புவதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. 3-1 என இந்த தொடரை இங்கிலாந்து அணி, முதல் நான்கு போட்டிகளிலேயே கைப்பற்றிவிட்ட நிலையில் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 332 ரன்களும், இந்திய அணி 292 ரன்களும் எடுத்தன. 

40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, அலெஸ்டர் குக் மற்றும் ஜோ ரூட்டின் அபார சதத்தால் 423 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 464 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 2 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய மூன்றாவது ஓவரில் ஷிகர் தவானும் புஜாராவும் அவுட்டாகினர். 3வது ஓவரின் 3வது பந்தில் தவானை வீழ்த்திய ஆண்டர்சன், அந்த ஓவரின் கடைசி பந்தில் புஜாராவை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 563 விக்கெட்டுகளை வீழ்த்தி, மெக்ராத்தை சமன் செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமைக்கு மெக்ராத்தே சொந்தக்காரராக இருந்தார். இந்நிலையில் தற்போது அவரை ஆண்டர்சன் சமன் செய்துள்ளார். இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் மெக்ராத்தை பின்னுக்கு தள்ளி ஆண்டர்சன் முந்திவிடுவார். 

இந்த தொடரில் இதுவரை 23 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆண்டர்சன், ஒருமுறை கூட கோலியின் விக்கெட்டை வீழ்த்தவில்லை. ஒருமுறை ஆண்டர்சன் வீசிய பந்து கோலியின் பேட்டில் எட்ஜ் ஆகி சென்றது. அதை ஸ்லிப் ஃபீல்டர் பிடிக்காததால் அந்த வாய்ப்பும் பறிபோனது. அதன்பிறகு நடந்துவரும் ஐந்தாவது போட்டியில் கோலிக்கு எல்பிடபிள்யூ கேட்டு அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அபராதம் விதிக்கப்பட்டது. அவரும் எப்படியாவது கோலியின் விக்கெட்டை எடுத்துவிடத் துடித்தார். ஆனால் கடைசி இன்னிங்ஸிலும் கோலியின் விக்கெட்டை பிராட் தான் எடுத்தார். அதனால் ஆண்டர்சனுக்கு இருந்த கடைசி வாய்ப்பும் பறிபோனது. 

இதற்கிடையே, சோனி சிக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரேபிட் ஃபயர் கேள்விகளுக்கு ஆண்டர்சன் பதிலளித்தார். அப்போது, விராட் கோலி கடும் மோதலை விரும்புகிறார். எனவே அவருக்கு பந்துவீசவே விரும்புவதாக ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். 

இந்த தொடரில் கோலி 10 இன்னிங்ஸ்களில் ஆடி 593 ரன்களை குவித்துள்ளார். 
 

click me!