ஐஎஸ்எல்: சென்னை - டெல்லி மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது; இப்பவும் சென்னைக்கு தான் முதலிடம்...

 
Published : Jan 08, 2018, 10:50 AM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
ஐஎஸ்எல்: சென்னை - டெல்லி மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது; இப்பவும் சென்னைக்கு தான் முதலிடம்...

சுருக்கம்

Isl Chennai - Delhi collapsed at the box level Now it up to Chennai

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் சென்னையின் எஃப்சி - டெல்லி டைனமோஸ் எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் சென்னையின் எஃப்சி - டெல்லி டைனமோஸ் எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்து.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தியது டெல்லி அணி. அதன் பலனாக 24-வது நிமிடத்தில் அந்த அணி முதல் கோல் அடித்தது. சக வீரர் நந்தகுமார் சேகர் பாஸ் செய்த பந்தை, அருமையாகப் பாய்ந்து தலையால் முட்டி கோலடித்தார் டேவிட்.

சென்னை தனது முதல் கோல் வாய்ப்புக்கு போராடி வந்த நிலையில், 42-வது நிமிடத்தில் ரெனெ மிஹெலிக் பாஸ் செய்த பந்தை, ஜிஜி லால்பெக்லுவா தலையால் முட்டி கோலடிக்க, முதல் பாதி முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது.

பின்னர் தொடங்கிய 2-வது பாதியில் சென்னை  ஜிஜி 51-வது நிமிடத்தில், தனக்கும் அணிக்குமான 2-வது கோலை பதிவு செய்தார். இம்முறை ஜெர்மன்பிரீத் பாஸ் செய்த பந்தை, லாவகமாக கடத்திச் சென்று கோல் போஸ்ட் கார்னரில் அவர் கோலடித்தார். இதனால், சென்னை 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆட்டம் முடியும் தருவாயில் டெல்லி வீரர் குயோன் ஃபெர்னான்டஸ் சக வீரர் காளு உச்சே உதவியுடன் கோலடிக்க, ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் நிறைவடைந்தது.

அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னைக்கு இது 2-வது சமன் ஆகும். டெல்லிக்கு இது முதல் சமன்.

இத்துடன் ஒன்பது ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை 5 வெற்றி 2 தோல்விகளுடன் முதலிடத்தில் உள்ளது.

எட்டு ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி ஒரு வெற்றி, 6 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா