எல்லாத்துக்கும் தயாராதான் இருக்கோம்!! தெறிக்கவிட்ட இஷாந்த் சர்மா

By karthikeyan VFirst Published Nov 16, 2018, 5:06 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் என்றாலே சண்டைகளுக்கோ வாக்குவாதங்களுக்கோ சர்ச்சைகளுக்கோ பஞ்சமே இருக்காது. 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் என்றாலே சண்டைகளுக்கோ வாக்குவாதங்களுக்கோ சர்ச்சைகளுக்கோ பஞ்சமே இருக்காது. 

எதிரணி வீரர்களை வம்பிழுத்து சீண்டி உளவியல் ரீதியாக வீழ்த்தி பின்னர் விக்கெட்டை வீழ்த்துவதும் போட்டியில் தோற்கடிப்பதும் ஆஸ்திரேலிய வீரர்கள் கையாளும் வியூகங்களில் ஒன்று. இதை காலம் காலமாக வெற்றிகரமாக செய்துவருகின்றனர். வெற்றி பெறுவதற்காக எந்தவிதமான செயலிலும் ஈடுபடுவார்கள் என்பது, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அம்பலமானது. 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் இருவரும் தடை பெற்றனர். இந்த விவகாரம் அந்த அணியின் மீதான நம்பகத்தன்மையையே சிதைத்தது. அதனால்தான் இருவருக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு அணியை மீண்டும் வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது அந்த அணி நிர்வாகம். எனவே முன்புபோல் ஆஸ்திரேலிய அணி அட்டகாசங்கள் செய்வதில்லை, ஓவரா ஆடுவதுமில்லை. 

இந்நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான போட்டி என்றால் சொல்லவே தேவையில்லை. ஹர்பஜன் சிங் - சைமண்ட்ஸ் தொடங்கி கோலி வரை சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் ஆக்ரோஷமாக ஆட, அதற்கு சற்றும் குறைவில்லாமல் கோலி ஆக்ரோஷப்பட, கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கிண்டல் செய்ய, அதற்கு கோலி நடுவிரலை உயர்த்திக்காட்டியது என சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை. 

கோலியை ஆஸ்திரேலிய ஊடகங்கள் கிண்டல் செய்தது, விமர்சித்தது என கடந்த சுற்றுப்பயணங்கள் எதுவுமே சுமூகமானதாக இருந்ததில்லை. படுசுவாரஸ்யமாகத்தான் இருந்துள்ளது. 

இந்நிலையில், இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணமும் சுவாரஸ்யம் நிறைந்ததாகவும் பல சண்டைகள் நிறைந்ததாகவும்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய கேப்டன் கோலி, நாங்கள் சண்டையையோ வாக்குவாதத்தையோ விரும்பவில்லை. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி அதை செய்தால் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்தார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, கடந்த பயணத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்ததுபோல் இந்த முறை இருந்தாலும் அது குறித்து கவலைப்படப் போவதில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் செய்வதைப் பார்க்கலாம். அவர்கள் உண்மையில் நட்பாகத்தான் இருப்பார்கள் என்று நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. அங்கே போனால், நிச்சயம் கடினமான சூழல் இருக்கும்.உங்கள் நாட்டுக்காக நீங்கள் விளையாடும்போது, யாரும் எளிதாக ரன்களையும், விக்கெட்டுகளையும் விட்டுத்தர மாட்டார்கள். கடினமான விளையாட்டில் கடினமாகத்தான் போராடி சவால்களை எதிர்கொள்ள முடியும் என இஷாந்த் சர்மா தெரிவித்தார்.
 

click me!