கிரிக்கெட் உலகமே கொண்டாடும் ரஷீத் கான் யாருடைய ரசிகர் தெரியுமா..?

Published : May 27, 2018, 03:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
கிரிக்கெட் உலகமே கொண்டாடும் ரஷீத் கான் யாருடைய ரசிகர் தெரியுமா..?

சுருக்கம்

Is rashid khan a fan of mahesh babu

19 வயதே ஆன ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான், ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக ஆடிவருகிறார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறார். ஐபிஎல் 11வது சீசனின் இறுதி போட்டி இன்று நடக்க உள்ளது. இந்த சீசன் முழுவதுமே ரஷீத் கான் சிறப்பாக ஆடிவருகிறார். அணியின் வெற்றிக்கு முழுமையான பங்களிப்பை அளித்து வருகிறார்.

அதிலும் கொல்கத்தாவுக்கு எதிரான இரண்டாவது தகுதி சுற்று போட்டியில், 10 பந்துகளில் 34 ரன்கள் அடித்து பேட்டிங்கில் மிரட்டிய ரஷீத், மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு கேட்ச்சுகள் ஒரு ரன் அவுட் என ஃபீல்டிங்கிலும் அசத்தினார். கொல்கத்தாவை வீழ்த்தியது ஹைதராபாத் அணி என்று சொல்வதை விட ரஷீத் கான் என சொன்னால் மிகையாகாது.

ரஷீத் கானின் ஆட்டத்தை கண்ட, சச்சின் மற்றும் டிராவிட் ஆகிய ஜாம்பவான்கள், ரஷீத் கான் உலகின் தலைசிறந்த ஸ்பின்னர் என புகழாரம் சூட்டியுள்ளனர்.

ரஷீத் கானுக்கு இந்தியாவிலும் ரசிகர் பட்டாளம் பெருகியுள்ளது. ரஷீத் கான் இந்தியாவிற்கு ஆடும் வகையில், அவருக்கு இந்திய குடியுரிமை கேட்கும் அளவிற்கு இந்தியாவில் ரசிகர்களை சம்பாதித்துவிட்டார் ரஷீத் கான்.

கொல்கத்தாவுக்கு எதிரான இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் அவரது ஆட்டத்தை கண்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் மட்டும் பாராட்டவில்லை. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் பாராட்டியிருந்தார்.

இதுதொடர்பாக மகேஷ் பாபு பதிவிட்டிருந்த டுவீட்டில், ரஷீத் கானுக்கு தலை வணங்குகிறேன் என பாராட்டி பதிவிட்டிருந்தார்.

Take a bow @rashidkhan_19... Whatta match by @SunRisers 👏Can't wait for Sunday!!! Congratulations to the whole team. 😊
Go #OrangeArmy #SRH
— Mahesh Babu (@urstrulyMahesh) 25 May 2018

அதற்கு பதில் டுவீட் செய்துள்ள ரஷீத் கான், நன்றி சகோதரரே.. உங்கள் படங்களை எல்லாம் ரசித்து பார்ப்பேன் என பதிவிட்டுள்ளார்.

Thank you bro 🙌🏻🙌🏻 watching  your movies keenly 😊
— Rashid Khan (@rashidkhan_19) 25 May 2018

ரஷீத் கானின் டுவீட்டை மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!