வில்லியம்சனை கைகாட்டிவிட்ட தோனி..! பிரஸ் மீட்டில் கலகலத்த “தல”

 
Published : May 27, 2018, 03:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
வில்லியம்சனை கைகாட்டிவிட்ட தோனி..! பிரஸ் மீட்டில் கலகலத்த “தல”

சுருக்கம்

csk skipper dhoni fun in press meet

ஐபிஎல் 11வது சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

இறுதி போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இறுதி போட்டியில் மோதும் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர். ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி, கேப்டன் வில்லியம்சன் மற்றும் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், கேப்டன் தோனி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, லெக் ஸ்பின்னர்களின் பங்களிப்பு குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, எங்கள் அணியைவிட நீங்கள் தான் சிறந்த லெக் ஸ்பின்னரை வைத்திருக்கிறீர்கள்; அதனால் நீங்கள் பதில் சொல்லலாம் என வில்லியம்சனை கைகாட்டிவிட்டார் தோனி. தோனி இவ்வாறு சொன்னதும், வில்லியம்சன், டாம் மூடி, பிளெமிங் அனைவருமே சிரித்துவிட்டனர். பிறகு வில்லியம்சன் பேசியதும், லெக் ஸ்பின்னர்களின் முக்கியத்துவம் மற்றும் வெற்றிகளில் லெக் ஸ்பின்னர்களின் பங்களிப்பு குறித்து தோனி கருத்து தெரிவித்தார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!