தோனிக்கு அதெல்லாம் தேவையில்லை.. ஹர்பஜன் பகிரும் சுவாரஸ்யம்

 
Published : May 27, 2018, 01:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
தோனிக்கு அதெல்லாம் தேவையில்லை.. ஹர்பஜன் பகிரும் சுவாரஸ்யம்

சுருக்கம்

harbhajan singh about csk skipper dhoni

தோனிக்கு தனது ஆலோசனை எல்லாம் தேவைப்படாது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 11வது சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் ஹர்பஜன் சிங் அதிகமான போட்டிகளில் ஆடியுள்ளதால், மைதானத்தை பற்றி மற்ற வீரர்களை விட ஹர்பஜன் சிங்கிற்கு நன்றாக தெரியும். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 10 சீசன்களில் ஆடிய ஹர்பஜன் சிங், இந்த சீசனில் சென்னை அணியில் ஆடிவருகிறார். ஹர்பஜனைப் போலவே மும்பை அணியின் முன்னாள் வீரர் அம்பாதி ராயுடுவும் மும்பை வான்கடே மைதானத்தில் அதிகமான போட்டிகளில் ஆடியுள்ளார்.

இன்று இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் சிங் பேட்டியளித்துள்ளார். அப்போது, தோனிக்கு என்னுடைய ஆலோசனையோ அல்லது ராயுடுவின் ஆலோசனையோ தேவைப்படாது. நேர்மையாக சொல்ல வேண்டுமானால், தோனிக்கு அதிகமான ஆலோசனைகள் என்னிடமிருந்து தேவைப்படுவதாக நினைக்கவில்லை. ஆனால் வான்கடே மைதானத்தில் மற்ற வீரர்களை விட நானும் ராயுடுவும் அதிகமான போட்டிகளில் ஆடிய அனுபவம் இருக்கிறது. சிறு சிறு ஆலோசனைகளை நாங்கள் கூறலாம். ஆனால் தோனிக்கு அதிகமான ஆலோசனைகள் தேவைப்படாது என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓபனிங் முதல் பினிஷிங் வரை.. இந்திய அணியில் இடம் பிடிக்க புதிய அவதாரமெடுத்த இஷான் கிஷன்
விஜய் ஹசாரே தொடரில் அதிரடி சதம்.. கம்பீரை கழுவி கழுவி ஊற்றும் ரோகித், கோலி ரசிகர்கள்