
ஐபிஎல் 11வது சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
இறுதி போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இறுதி போட்டியில் மோதும் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர். ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி, கேப்டன் வில்லியம்சன் மற்றும் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், கேப்டன் தோனி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, இறுதி போட்டியில் வெற்றி பெற என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த தோனி, நான் திட்டமெல்லாம் வைத்திருக்கவில்லை. பயிற்சியாளர் பிளெமிங் தான் திட்டங்கள் வைத்திருக்கிறார். அவரது திட்டங்களை நான் செயல்படுத்துகிறேன், அவ்வளவுதான். அதற்காக அவருக்கு பெரிய தொகைக்கான காசோலை கிடைக்கிறது என கிண்டலாக பதிலளித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.