கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அது ஏன்? என விரிவாக பார்க்கலாம்.
Why Shahrukh Khan banned from entering Wankhede in Mumbai: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ம் தேதி முதல் தொடங்க உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது குறித்து உங்களுக்கு தெரியுமா?
ஷாருக்கானுக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தடை
2012ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு ஷாருக்கான் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில், மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி போராடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ஷாருக்கான் உற்சாகமாக கொண்டாடியபோது அவருக்கும், மைதானத்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
IPL: CSK vs MI போட்டியில் ஹர்திக் பாண்ட்யா விளையாட தடை விதிக்கப்பட்டது ஏன்?
ஷாருக்கான் பாதுகாப்பு அதிகாரிகள் மோதல்
மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA), ஷாருக்கான் போதையில் இருந்த நிலையில் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து பாதுகாப்பு ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியது. ஷாருக்கானின் கட்டுக்கடங்காத நடத்தை மற்றும் தகாத வார்த்தைகளைக் காரணம் காட்டி, மரைன் டிரைவ் காவல் நிலையத்தில் MCA அதிகாரிகள் புகார் அளித்தனர். இதன் விளைவாக, MCA-வின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஷாருக்கான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மும்பை வான்கடே மைதானத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
விதிகளை மீறினால் நடவடிக்கை
ஒரு நபரின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், மும்பை வான்கடே மைதான விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் மகாராஷ்டிரா முதல்வரும், அப்போதைய MCA தலைவருமான விலாஸ்ராவ் தேஷ்முக் தெளிவுபடுத்தினார். ''எந்த ஒரு நபராக, பிரபலமாக இருந்தாலும் விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். முறையான அங்கீகாரம் இல்லாமல் அவர் (ஷாருக்கான்) எப்படி மைதானத்திற்குள் நுழைய முடியும்? பரிசளிப்பு விழாவிற்கு என்னை அழைக்காவிட்டால் நான் கூட மைதானத்தில் இறங்க முடியாது, ” என்று தேஷ்முக் தெரிவித்து இருந்தார்.
2025ம் ஆண்டு தடை நீக்கம்
அந்த பாதுகாப்பு ஊழியர் தனது குழந்தைகள் முன்பு சில மதரீதியான வார்த்தைகளை பயன்படுத்தியதால் நிலைமை மோசமானதாக ஷாருக்கான் விளக்கம் அளித்து இருந்தார். 2012ல் மும்பை வான்கடே மைதானத்தில் ஷாருக்கான் நுழைய 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் அந்த தடை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 2015ம் ஆண்டு நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.1,450 கோடி சொத்து! மாதுரி தீட்சித் உடன் கிசுகிசுக்கப்பட்ட ராஜ பரம்பரை கிரிக்கெட் வீரர்!