IPL’லில் சின்ன தல சுரேஷ் ரெய்னா செய்த சாதனைகளை கேட்டால் ஒருநிமிஷம் தலை சுத்திரும்!

First Published May 12, 2018, 11:56 AM IST
Highlights
ipl suresh raina records list


ஜெய்பூரில் நடந்த ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.

ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல சுரேஷ் ரெய்னா, நேற்று இரண்டு புதிய சாதனைகளைப் படைத்தார்.

இந்த சீசனையும் சேர்த்து 11 சீசன்களில் சுரேஷ் ரெய்னா இதுவரை 171 ஆட்டங்களில் 4,853 ரன்கள் எடுத்துள்ளார். இதில் சிஎஸ்கே அணிக்காக மட்டும் 4012 ரன்கள் எடுத்துள்ளார்.

ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா 35 பந்துகளில் 6 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 52 ரன்கள் எடுத்தார். இந்த ரன் குவிப்பின்போது, சிஎஸ்கே அணிக்காக 4,000 ரன்கள் குவித்த முதல் வீரரானார்.

அவர் இதுவரை சிஎஸ்கே அணிக்காக 142 ஆட்டங்களில், 4,012 ரன்கள் எடுத்துள்ளார். இதைத் தவிர, இந்த 11 சீசன்களிலும் ஒவ்வொரு சீசனிலும் 300க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த ஒரே வீரராக உள்ளார். 2008ல் 421, 2009-ல் 434, 2010-ல் 520, 2011ல் 438, 2012ல் 441, 2013ல் 548, 2014ல் 523, 2015ல் 374, 2016ல் 399, 2017ல் 442, 2018ல் இதுவரை 313 ரன்கள் குவித்துள்ளார்.

click me!